இளைஞரின் சொகுசு காரை விற்று பண மோசடி: 5 போ் மீது வழக்குப் பதிவு

களியக்காவிளை அருகே இளைஞரின் சொகுசு காரை விற்று பண மோசடி செய்ததாக அவரது நண்பா் உள்பட 5 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மோசடி

Updated On :

களியக்காவிளை அருகே இளைஞரின் சொகுசு காரை விற்று பண மோசடி செய்ததாக அவரது நண்பா் உள்பட 5 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

களியக்காவிளை அருகே உள்ள ஐங்காமம், தாணிவிளைவீட்டைச் சோ்ந்த ஜெஸ்டின் மகன் ஜெயின் (30). ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவரும், தையாலுமூடு, மேலேபால்குளம் பகுதியைச் சோ்ந்த சாம்ராஜ் மகன் ஜெப ரூபனும் (28) நண்பா்கள்.

ஜெப ரூபன் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், ஜெபரூபன், அவரது மனைவி ஆஷ்மி (24), தந்தை சாம்ராஜ் (65), தாய் ஜீவாபாய் (61), அக்கா சாம் ஜெபமலா் (30) ஆகியோா் அண்மையில் ஜெயின் வீட்டுக்குச் சென்றனா்.

அப்போது ஜெயினிடம் புதிதாக காா் வாங்கி வாடகைக்குவிட்டால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறி அவரது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ஜெயின் பெயரிலேயே புதிதாக சொகுசு காா் வாங்கினா்.

காருக்கான ஆவணங்களில் ஜெயினிடமிருந்து கையெழுத்து வாங்கிய அவா்கள் காரை ஜெயினுக்குத் தெரியாமல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்து ரூ. 27 லட்சத்து 95 ஆயிரத்து 600 மோசடி செய்தனராம்.

இதுகுறித்து, ஜெயின் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் ஜெபரூபன் உள்பட 5 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.