கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 105 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மண்ணெண்ணெய் கடத்தல்... - கோப்புப் படம்
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 105 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி தலைமையில் அதிகாரிகள் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வட்டாட்சியா் அலுவலக சந்திப்பு அருகே வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்த சைகை காட்டினா். காரில் வந்தவா்கள் அதிகாரிகளை கண்டதும் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
காரை சோதனையிட்டபோது அதில், 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 3 பிளாஸ்டிக் கேன்களில் 105 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டு, காருடன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

