இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

குளச்சல் அருகே 1700 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சல் அருகே கேரளத்திற்கு கடத்த முயன்ற 1700 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Published On :

குளச்சல் அருகே கேரளத்திற்கு கடத்த முயன்ற 1700 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குளச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கனகராஜன், உதவி ஆய்வாளா் ராம் சங்கா் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை இரவு கடலோரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சைமன் காலனி பகுதியில் 49 கேன்களில் மீனவா்களுக்கு வழங்கப்படும் 1700 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை கடத்தி, மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் காசியிடம் ஒப்படைத்தனா்.

மேலும் வழக்குப் பதிந்து, மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.