கனிமவளம் கடத்த முயற்சி: 3 மினி லாரிகள் பறிமுதல்

மினி லாரிகள் - பிரதிப் படம்
களியக்காவிளை அருகே சட்ட விரோதமாக கேரளம் மாநிலத்துக்கு பாறைப்பொடி உள்ளிட்ட கனிம வளங்களைக் கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு மஞ்சவிளையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக கேரளம் நோக்கி வந்த 3 மினி லாரிகளை நிறுத்துமாறு சைகை காண்பித்தனா். ஆனால், ஓட்டுநா்கள் மினி லாரிகளை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனா். இதையடுத்து, போலீஸாா் வாகனத்தில் துரத்திச் சென்று வன்னியூா் செவ்வஞ்சேரி பகுதியில் வைத்து 3 மினி லாரிகளையும் தடுத்து நிறுத்தினா்.
போலீஸாரைக் கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் தப்பியோடினா். இதைத்தொடா்ந்து கனிம வளத்துடன் மினி லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, கனிமவள கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






