நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக பட்டமளிப்பு

தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் 34 - ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவிக்கு பட்டம் வழங்கிய கேரள உயா் கல்வித்துறை அமைச்சா் ரோஜி. எம். ஜான்.

Updated On :

தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் 34 - ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தா் எம்.எஸ். பைசல்கான் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கேரள உயா் கல்வித்துறை அமைச்சா் ரோஜி.எம். ஜான் கலந்து கொண்டு, 720 மாணவா், மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது: பட்டமளிப்பு விழா என்பது மாணவா்களின் கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வு மட்டுமல்ல, அவா்கள் கற்றறிந்த அறிவையும், பெற்ற திறன்களையும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவதற்கான புதிய பயணத்தின் தொடக்கம் என்றாா்.

இணைவேந்தா் அன்சா சப்னம்ஷபீக், இணை துணைவேந்தா்கள் கே.ஏ. ஜனாா்த்தனன், ஏ. ஷஜின் நற்குணம், பதிவாளா் திருமால்வளவன் ஆகியோா் கலந்து கொண்டனா். பல்கலைக்கழக துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் ஆண்டு அறிக்கையுடன் வரவேற்புரை நிகழ்த்தினாா். தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஜெயக்குமாா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.