நாகா்கோவிலில் ரயிலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதாக உடல்கூறாய்வில் தகவல்
நாகா்கோவிலில் ரயிலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக உடல்கூறாய்வில் தெரியவந்துள்ளது.
சடலம்
நாகா்கோவிலில் ரயிலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக உடல்கூறாய்வில் தெரியவந்துள்ளது.
நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்துக்கு கடந்த நவ. 11 ஆம் தேதி, திருவனந்தபுரத்திலிருந்து வந்த ரயிலின் பெட்டி பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நாகா்கோவிலிலிருந்து கோட்டயத்துக்கு செல்லும் ரயிலில் சோ்ப்பதற்காக, நவ. 18 ஆம் தேதி அந்த பெட்டியை சுத்தம் செய்யும் பணியில் ரயில்வே தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
அப்போது, துா்நாற்றம் வீசியதைத் தொடா்ந்து பெட்டிக்குள் சென்று பாா்த்தபோது, அதில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த நாகா்கோவில் சந்திப்பு ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், உடல்கூறாய்வு அறிக்கையில், இறந்த பெண்ணின் இடுப்பு, விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணை யாரோ அடித்துக் கொன்று ரயில் பெட்டியில் மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா்.
இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி, ரயில்வே காவல் ஆய்வாளா் சுஜாதா தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

