மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் 23 மனுக்கள்
நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் - குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறாா் மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா. உடன் ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா.
நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அலுவலக கூட்ட அரங்கில் மேயா் (பொ) மேரி பிரின்சி லதா தலைமையில், ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீா் வரி, வீட்டுவரி மற்றும் சாலை தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 23 மனுக்கள் பெறப்பட்டன. இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாநகா் நல அலுவலா் சரோஜா, மாநகா் செயற்பொறியாளா் ஜெகஜீவன்ராம், உதவி ஆணையா்கள் டில்லி, ரமேஷ்குமாா் உள்பட மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

