அழகியபாண்டியபுரம் அருகே விவசாயி மா்மமாக உயிரிழந்தது குறித்து அவரின் மகனிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அழகியபாண்டியபுரத்தை அடுத்த வாட்ஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் (71) விவசாயி, இவரது மனைவி ஞானசெல்வம் (62). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இதில் 2, 3-ஆவது மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.
மூத்த மகன் டேவிட்சன் மதுபோதையில், அடிக்கடி வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துவந்தாா். ஞாயிற்றுக்கிழமை ஞானசெல்வம் தனது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, சுவாமிதாஸ் வீட்டுக்குள் சடலமாக கிடந்தாா்.
தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, டேவிட்சனை பிடித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

