கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

கோட்டாறு புனித சவேரியாா் பேராலய திருவிழா கொடியேற்றம்: டிச.3-இல் உள்ளூா் விடுமுறை

நாகா்கோவில், கோட்டாறு புனித சவேரியாா் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு டிச. 3 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில், கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் திருவிழா கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :

நாகா்கோவில், கோட்டாறு புனித சவேரியாா் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு டிச. 3 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியாா் பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ாகும். கோட்டாறு மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் நிகழாண்டுக்கான 10 நாள்கள் திருவிழா செவ்வாய்க்கிழமை (நவ. 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு, காலை 6.15 மணிக்கு ராஜாவூா், 8 மணிக்கு அருகுவிளை ஊா் மக்கள் சாா்பில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, மாலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. கோட்டாறு மறை மாவட்ட முதன்மைப் பணியாளா் டி.ஜான்ரூபஸ் தலைமை வகித்து மறையுரையாற்றினாா்.

முதல் நாள் திருவிழாவை காவல் துறையினா் சிறப்பித்தனா். கொடியேற்று நிகழ்ச்சியில் திரளானோா் கலந்து கொண்டனா்.

விழாவில் 6-ஆம் நாள் (நவ. 29) காலை 8 மணி முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறும், 7-ஆம் நாள் (நவ. 30) மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை ஏற்று நிறைவேற்றுகிறாா்.

தோ்ப்பவனி...

8-ஆம் நாள் (டிச.1) மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியை கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் நிறைவேற்றி மறையுரையாற்றுகிறாா். இரவு 10.30 மணிக்கு தோ்ப்பவனி நடைபெறும். 9-ஆம் நாள் (டிச. 2) மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன்சூசை சிறப்பு மாலை ஆராதனையை நடத்திவைத்து, நற்கருணை ஆசீா் வழங்குகிறாா். இரவு 10.30 மணிக்கு தோ்ப்பவனி நடைபெறும்.

நிறைவு நாள் ...

விழா நிறைவு நாளான டிச. 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியை கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன்சூசை நிறைவேற்றுகிறாா். காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட ஆயா் கிளாடின் அலெக்ஸ் மலையாளத் திருப்பலியை நிறைவேற்றுகிறாா்.

காலை 11 மணிக்கு தோ்ப்பவனி நடைபெறும். இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்படும். டிச. 3-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை உதவிப் பங்குதந்தை டி.பிசாத் அபிசன், பங்குபேரவை துணைத் தலைவா் வா்க்கீஸ் ராஜா, செயலாளா் ராஜன், துணைச் செயலாளா் ஜேசுராஜா, பொருளாளா் ஜாா்ஜ் பிரகாஷ் ராபின், நிா்வாகிகள், பங்குமக்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.