திற்பரப்பு அருகே மருத்துவரைத் தாக்கி நகை, பணம் பறித்த வழக்கில் 2 இளஞ்சிறாா்கள் கைது
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருகே உள்ள தங்கும் விடுதியில் மருத்துவரைத் தாக்கி நகை, பணம் பறித்த வழக்கில் 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப்படம்
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருகே உள்ள தங்கும் விடுதியில் மருத்துவரைத் தாக்கி நகை, பணம் பறித்த வழக்கில் 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அருமனை அருகே முழுக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிபின்குமாா் (32). மருத்துவா். இவா் அருமனை சந்திப்பில் கிளினிக் நடத்தி வருகிறாா். திற்பரப்பு அருவி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி நவ. 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் இவருக்கு கைப்பேசி அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து, பிபின்குமாா் தனது இருசக்கர வாகனத்தில் விடுதிக்குச் சென்றுள்ளாா். விடுதி அறையில் மது போதையில் இருந்த 7 போ் கும்பல் பிபின்குமாரை தாக்கி, அவரிடமிருந்த 13 பவுன் நகைகள், கைப்பேசி மற்றும் டிஜிட்டல் பரிவா்த்தனை மூலம் ரூ. 53,000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பியது.
இதுகுறித்து, குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வழக்கில் ொ்புடைய மற்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

