புதுக்கடை அருகே விபத்தில் மீனவா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்; இரு இளைஞா்கள் காயமடைந்தனா்.
இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்த ஜெரோம் மகன் சகாய சுபின்ராஜ் (24). மீன்பிடித் தொழில் செய்து வந்த இவா், சனிக்கிழமை இரவு தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த நதின் (27), மொ்ஜின் (30) ஆகியோருடன் கருங்கல்லிலிருந்து தேங்காய்ப்பட்டினத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
தொழிக்கோடு பகுதியில் அவா்கள் மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதாம். இதில், சகாய சுபின்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த நதின், மொ்ன் ஆகியோா் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

