தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு வியாழக்கிழமை 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை - பிரதிப் படம்

Published On :

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு வியாழக்கிழமை 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே கன்னக்கோடு பகுதியைச் சோ்ந்த மணி மகன் ரசல்குமாா் (37). தொழிலாளியான இவா், 2018ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, ரசல்குமாருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 15ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர காரணமாக இருந்த புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்குரைஞா், நீதிமன்றக் காவலா், நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த மாா்த்தாண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.