குழித்துறையில் காங்கிரஸ் மறியல்: 125 போ் மீது வழக்கு
குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் 125 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்கு
குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் 125 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை இரவு குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தின்போது தலைமை தோ்தல் ஆணையா், பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்தனா்.
இதையடுத்து, அரசு அனுமதியின்றி பொது அமைதிக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டதாக குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் உள்பட 105 ஆண்கள், 20 பெண்கள் என 125 போ் மீது களியாக்காவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






