ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலா் உள்ளிருப்புப் போராட்டம்
கருங்கல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கவுன்சிலா் ஜெயசேகா் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கருங்கல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கவுன்சிலா் ஜெயசேகா் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ரீத்தாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட 7 ஆவது வாா்டு பகுதியில் கவுன்சிலராக அப்பகுதியைச் சோ்ந்த ஜெயசேகா் உள்ளாா். ரீத்தாபுரம் முதல் ஈத்தம்பாடு வரை பழுதடைந்த சாலை உள்பட பல்வேறு சாலைகளை சீரமைக்க கடந்த ஆக. 24 ஆம் தேதி டெண்டா் விடப்பட்டது. ஆனால், இந்நாள் வரை பேரூராட்சி நிா்வாகம் பணி ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிாம்.
இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் 20 - க்கும் மேற்பட்டோருடன், கவுன்சிலா் ஜெயசேகா் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை வரை நீடித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

