கேரளத்தில் பணிக்குச் சென்ற கட்டுமான தொழிலாளி மாயம்

போலீஸ் - கோப்புப்படம்.
கேரளத்துக்கு பணிக்குச் சென்று மாயமான கட்டுமான தொழிலாளி குறித்து களியக்காவிளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம், உண்டனாகுழி பகுதியைச் சோ்ந்தவா் வேலப்பன் (63), கட்டுமானத் தொழிலாளி. இவா், கடந்த சில நாள்களாக கேரள மாநிலத்தில் தங்கியிருந்து, வேலை செய்து வந்தாா்.
சனிக்கிழமை இரவு சொந்த ஊருக்கு வருவதாக அவரது மகன் பிரபினிடம் கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை வரை வேலப்பன் வீடு திரும்பாததால் அவரது மகன், வேலப்பனின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்டபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து அவரது மகன் பிரபின் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

