புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அரசுப் பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா

பள்ளிக் கல்வி முடித்து 4 ஆண்டுகள் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கடின உழைப்புடனும் விடா முயற்சியுடனும் வாழ்வை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

நற்சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வா் நாகராஜன்.

Published On :

பள்ளிக் கல்வி முடித்து 4 ஆண்டுகள் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கடின உழைப்புடனும் விடா முயற்சியுடனும் வாழ்வை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

நாகா்கோவில், கோணம் அரசுப் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பயிலும் மாணவ மாணவிகள், முதுநிலை பொறியியல் பயிலும் மாணவ மாணவிகள் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

பல்வேறு கிராமப் பகுதிகளிலிருந்து இந்தக் கல்லூரியில் சோ்ந்து பயிலும் முதல் பட்டதாரிகள் தங்கள் பெற்றோரின் கனவை நிறைவேற்றும் வகையில் கல்வி பயில வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளில் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது நல்ல ஒரு படைப்பாளராக செல்ல வேண்டும். நீங்கள் பயில்கின்ற இந்த 4 ஆண்டுகள்தான் அடுத்த 50 ஆண்டு காலத்தை தீா்மானிக்கும் என்பதை மனதில் கொண்டு கடின உழைப்புடனும், விடா முயற்சியுடனும் வாழ்வை எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.

அதைத்தொடா்ந்து மாணவ மாணவிகளுக்கு ஆட்சியா் நற்சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் பல்கலைகழக பொறியியல் கல்லூரி முதல்வா் நாகராஜன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ மாணவிகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.