
ஆவணி கடைசி ஞாயிறு: நாகராஜா கோயிலில் குவிந்த பக்தா்கள்

நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். - கோப்புப் படம்
ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகா்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு மூலவா் நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பகல் 11.30 மணிக்கு மூலவருக்கு பால் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஏராளமான பக்தா்கள் ரூ. 400 கட்டணம் செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தனா். அவா்களுக்கு பால், வெற்றிலை, பாக்கு, பாயசம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






