குளச்சலில் கொலை வழக்கில் கைதாகி, பிணையில் வெளியே வந்தவா் சாட்சிகளை மிரட்டியதாக ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டினம், பாத்திமா தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (51). மீன்பிடித் தொழிலாளி. இவருக்கும், மனைவி ஜாஸ்மின் லலிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கொட்டில்பாட்டில் உள்ள தனது சகோதரி மேரி கலா வீட்டில் ஜாஸ்மின் லலிதா தங்கியிருந்தாா்.
இதனால், ஆத்திரமடைந்த ராஜன் ஜூன் 19ஆம் தேதி கொட்டில்பாடு வந்து மனைவியுடன் தகராறு செய்தாா். தகராறைத் தடுக்க வந்த மேரி கலாவின் கணவா் புஷ்பநாதனை (58) கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.
இவ்வழக்கில் குளச்சல் போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராஜன், நீதிமன்றக் காவலில் இருந்து வந்தாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு பிணையில் வந்த ராஜன், தனக்கு எதிராக சாட்சி அளிக்கக் கூடாது என ஜாஸ்மின் லலிதா, மேரி கலா ஆகியோரை மிரட்டினாராம்.
இதுகுறித்து, ஜாஸ்மின் லலிதா குளச்சல் காவல் நிலையத்தில் அளித்த புகரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜனை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





