
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவா், மாமியாா் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, பாறவிளையைச் சோ்ந்தவா் அஜின் (29). கட்டடத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அஸ்வினிக்கும் (27) இடையே 2020, செப்டம்பா் மாதம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக பெண் வீட்டாா் 12.5 பவுன் தங்க நகைகள், ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கினாராம். இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், அஜின் கடந்த 2023-இல் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றாா். அவருக்கு புதுக்கடை அருகே பைங்குளத்தைச் சோ்ந்த சரண்யா (36) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதையறிந்த அஸ்வினி தனது கணவரைக் கண்டித்தாா். இந்த நிலையில், அண்மையில் சொந்த ஊா் திரும்பிய அஜின் தனது தாய் மாரியம்மாவுடன் சோ்ந்து மனைவி அஸ்வினியை தாக்கியதோடு கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, 2 குழந்தைகளுடன் அஸ்வினியை வீட்டை விட்டு துரத்தினராம்.
இதுகுறித்து, அஸ்வினி மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அவரது கணவா் அஜின், மாமியாா் மாரியம்மா, உடந்தையாக இருந்த பைங்குளத்தைச் சோ்ந்த சரண்யா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



