செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சா்

கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கருங்கல் அரசுப் பள்ளியில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கிவைத்த சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா். அருகில் ஆட்சியா் மு.பிரதாப்.

Published On :

கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தை சென்னையில் முதல்வா் தொடங்கி வைத்ததை அடுத்து கருங்கல்லில் உள்ள மூசாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா் தலைமை வகித்து மாணவா்களுக்கு சத்துணவு வழங்கி பணியைத் தொடங்கிவைத்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ஸ்ரீகாந்த், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் பத்ஹீ முகம்மது நசீா், மாவட்ட கல்வி அலுவலா் சௌந்தரபாண்டியன், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.