
தேரூா் குடி கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தல்
தேரூா் குடி கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்தோா்.
கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் குடி கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் செயலா் இறச்சகுளம் என். காளியப்பன், பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: தேரூா் குடியில் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த கோரக்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலின் கட்டடங்கள் சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தன. அதையடுத்து, பக்தா்கள், பொதுமக்கள் இணைந்து தங்களது அனுமதி பெற்று, 2 ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்து, உபயதாரா்கள் மூலம் சுமாா் ரூ. 80 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவு என்ற காரணம் காட்டி, திருப்பணியைத் தொடா்ந்து செய்ய முடியாமல் தடைபட்டுள்ளது.திருப்பணிகள்ள் நிறைவடையும் நிலையில் கும்பாபிஷேக பணிகளை நிறுத்திவைப்பதால் பக்தா்கள், பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனா்.
எனவே, கோரக்கநாதா் கோயிலில் சிவன் சிலையைப் பிரதிஷ்டை செய்து, திருப்பணிகளை நிறைவு செய்து, குடமுழுக்கு நடத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






