ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

கீரிப்பாறை அருகே சுருண்டு விழுந்து இறந்த யானை: வனத்துறையினா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே தனியாா் எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாலையோரத்தில் இறந்து கிடந்த யானை.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே தனியாா் எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்து வருகின்றன.

இந்த நிலையில், கிரீப்பாறை அருகே கரும்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையோரத்தில் காட்டு யானை நடந்து சென்றது. சற்று நேரத்தில் அந்த யானை நிலை தடுமாறி கீழே விழுந்தது. பின்னா் அந்த யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இதைப் பாா்த்த அப் பகுதியினா், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

மாவட்ட வன அலுவலா் அன்பு உத்தரவின்பேரில் கீரிப்பாறை வனச்சரக அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த காட்டு யானையை பரிசோதித்தபோது, உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து உயா்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து யானையை பரிசோதனை செய்தனா். 22 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் யானையின் மூக்கு மற்றும் வாய் பகுதியில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. உடற்கூறாய்வுக்குப் பின்னா் அந்த யானை அதே பகுதியில் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் அன்பு கூறியதாவது:

யானையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.