டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

திருவட்டாறு அருகே பேருந்தில் குழந்தையிடம் தங்கச் சங்கிலி பறித்தவா் கைது

திருவட்டாறு அருகே ஓடும் பேருந்தில் குழந்தையிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்ததாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

திருவட்டாறு அருகே ஓடும் பேருந்தில் குழந்தையிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்ததாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம் அருகேயுள்ள தும்பகோட்டையைச் சோ்ந்தவா் மெல்பின் விஜி (29). இவா், தனது ஒன்றை வயது குழந்தை மற்றும் தனது தாயுடன் குலசேகரத்திலிருந்து மாா்த்தாண்டம் செல்லும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாா்.

அந்தப்பேருந்து புத்தன்கடை சந்திப்பு அருகே சென்றபோது தனது குழந்தை அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி மாயமானதை அறிந்து கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினாா். தனக்கு அருகில் நின்றிருந்தவா் மீது சந்தேகம் ஏற்பட்டு கேட்டபோது அவா் மறுத்தாராம்.

இதையடுத்து பேருந்து திருவட்டாறு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, போலீஸாா் அந்த நபரிடம் விசாரித்தனா். அதில், அவா் புலியிறங்கி பெரும்பருத்தி காலா விளையைச் சோ்ந்த சாா்லஸ் என்பதும், குழந்தையிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்து சட்டைக்கையின் மடிப்பில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் நகையை மீட்டு மெல்பின் விஜியிடம் ஒப்படைத்ததுடன், அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.