கருவந்தாவில் வேளாண் அலுவலா்கள் ஆய்வு
சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் உழவா் உற்பத்தியாளா் குழுவிற்கு வழங்கப்பட்ட மதிப்பு கூட்டு இயந்திரங்களை வேளாண் அலுவலா்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.


சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் உழவா் உற்பத்தியாளா் குழுவிற்கு வழங்கப்பட்ட மதிப்பு கூட்டு இயந்திரங்களை வேளாண் அலுவலா்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா்(பொ) ந.க.நல்லமுத்து ராஜா தலைமையிலான வேளாண் அதிகாரிகள், மானாவாரி திட்டத்தின் கீழ் கருவந்தா உழவா் உற்பத்தியாளா் குழுவிற்கு வழங்கப்பட்ட மதிப்பு கூட்டு இயந்திரங்களை ஆய்வு செய்தனா். மேலும், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலமாக்கும் திட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து சாகுபடியை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, ஆலங்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலா் முருகன், உதவி வேளாண் அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி மற்றும் விசாயிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...