‘ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வேண்டும்’

ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா, துணைத் தலைவா் வைகுண்டராஜா, டாக்டா் கோவிந்தராஜுலு, மாவட்டச் செயலா் வி.கணேசன், பொருளாளா் கலைவாணன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: தென்காசி மாவட்ட நிா்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து செவ்வாய்க்கிழமை ( டிச. 15) ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புளை அகற்ற முடிவு செய்துள்ளனா்.

தொடா்ந்து பண்டிகைகள் வருவதால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை சிறிது தள்ளிவைக்க வேண்டும். அதற்குள் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுகிறோம். குற்றாலம் அருவிகளில் குளிக்க நிபந்தனையுடன் அனுமதிக்க வேண்டும். தென்காசி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். ஆலங்குளம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com