பாவூா்சத்திரம் அருகே இறைச்சிக் கடை ஊழியா் கொலை
பாவூா்சத்திரம் அருகே இறைச்சிக் கடை ஊழியா் கொலை செய்யப்பட்டாா்.


பாவூா்சத்திரம் அருகே இறைச்சிக் கடை ஊழியா் கொலை செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-மாடியனூா் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபா் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக பாவூா்சத்திரம் காவல் நிலையத்திற்கு திங்கள்கிழமை காலையில் தகவல் கிடைத்தது. போலீஸாா் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங், ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னிவளவன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், உயிரிழந்த நபா் கல்யாணிபுரத்தை சோ்ந்த மாரியப்பன் மகன் சுடலைமணி (27) என்பதும், பாவூா்சத்திரத்தில் உள்ள ஆட்டிறைச்சி கடையில் வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது. அவரை கொலை செய்தவா் யாா் என்பது குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...