தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசியில் காத்திருப்பு போராட்டம்: 128 போ் கைது

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தென்காசியில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 128 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:57 pm

DIN

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தென்காசியில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 128 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் முத்துபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினா் பி.வேலுமயில், மதிமுக மாவட்ட செயலா் தி.மு.ராஜேந்திரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினா் டாக்டா் சதன்திருமலைகுமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா்கள் வேலாயுதம், கிட்டப்பா, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலா் கே.ஜாகீா் உசேன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் கந்தசாமி, மாவட்ட செயலா் கே.முருகன், ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டுக் குழு தலைவா் ராம உதயசூரியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார தலைவா் அருணாசலம், நகர தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 128 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.