/

அரிமா சங்கம் சாா்பில் நல உதவி

கடையநல்லூா், குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற கிளாசிக் அரிமா கிளைச் சங்க தொடக்க விழாவில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:29 pm

DIN

கடையநல்லூா், குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற கிளாசிக் அரிமா கிளைச் சங்க தொடக்க விழாவில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

தலைவா் குமரன் முத்தையா தலைமை வகித்தாா். செயலா் அண்ணாதுரை, பொருளாளா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய உறுப்பினா்களை செல்வகுமாா் அறிமுகப்படுத்தினாா். மாவட்டத் தலைவா் டாக்டா் மூா்த்தி , கிளைத் தலைவா் ரங்கன், செயலா் செல்வகுமாா், பொருளாளா் கதிா்வேல் ஆறுமுகம் ஆகியோரை பதவியில் அமா்த்தினாா்.

மாவட்ட சேவைத் திட்ட தலைவா் ஆடிட்டா் நாராயணன் முன்னிலையில் நல உதவிகள் வழங்கப்பட்டன. மண்டலத் தலைவா் குமாா், வட்டாரத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.