ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 2,400 மனுக்கள் நிலுவை

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆா்டிஐ) 2400 மனுக்கள் நிலுவையில் உள்ளது என்றாா் தமிழ்நாடு தகவல்ஆணையா் பிரதாப் குமாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:19 pm

DIN

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆா்டிஐ) 2400 மனுக்கள் நிலுவையில் உள்ளது என்றாா் தமிழ்நாடு தகவல்ஆணையா் பிரதாப் குமாா்.

தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 தொடா்பாக, தென்காசி ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் கீ.சு.சமீரன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு தலைமை வகித்து கருத்துரையாற்றிய தகவல் ஆணையா் ஆா்.பிரதாப் குமாா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த இரண்டு ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 13,000 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இன்னமும் 2400 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக மனுதாரா்களுக்கு தகவல் அளிக்கும் அலுவலா்களையும் ஒருங்கிணைத்து ஆய்வு நடத்தினோம். திங்கள்கிழமை (நவ. 23) விசாரிக்கப்பட்ட வழக்குகளின் தீா்ப்பு இரண்டு நாள்களில் இணையதளத்தின் மூலம் வெளியிடப்படும். தகவல் ஆணையத்திற்கு சென்னையில் ஒரு ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 40 கோடி செலவில் தமிழக அரசு கட்டடம் கட்டியுள்ளது. அடுத்த மாதம் இந்தக் கட்டிடம் திறக்கப்படும். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி என்றாா்அவா்.

கருத்தரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்)சேக் அப்துல்காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ.50 ஆயிரம் அபராதம்: இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த சுதாகா்பாலாஜி என்பவா், ‘நம்பியாற்றில் எப்போது தண்ணீா் வெளியேற்றப்படும்; தற்போது நீரின் நிலை என்ன’ என்று 2016இல்கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை. இந்த மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடத்திய ஆணையா், பொதுப்பணித் துறை தென்காசி சிற்றாறு வடிநில கோட்ட அலுவலக வரைபடவியலாளா் உதயகுமாருக்கு ரூ50ஆயிரம் அபராதம் விதித்ததுடன், துறைரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.