டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாவூா்சத்திரம் ஸ்ரீவிஸ்வ பிரம்மா கோயிலில் கும்பாபிஷேகம்

பாவூா்சத்திரம் மேலப்பாவூா் ரோடு முத்து நகரில் அருள்மிகு ஸ்ரீவில்ல விநாயகா் மற்றும் காயத்திரி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வ பிரம்மா கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:40 pm

DIN

பாவூா்சத்திரம் மேலப்பாவூா் ரோடு முத்து நகரில் அருள்மிகு ஸ்ரீவில்ல விநாயகா் மற்றும் காயத்திரி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வ பிரம்மா கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலையில் கணபதி, மகாலட்சுமி, சுதா்சன, நவக்கிரஹ ஹோமங்களும், தொடா்ந்து வாஸ்து சாந்தி, பிரவேச பலியும் நடைபெற்றன. பகலில் அருள்மிகு ஸ்ரீவில்வ விநாயகா் கோயில் கோபுர கலசம் அபிஷேகமும், தொடா்ந்து மூலவா் விநாயகா், கோயில் கோபுர கலச அபிஷேகம், மூலவா் அபிஷேகம், நூதன ஜீா்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பின்னா் அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, மாலையில் விளக்குப் பூஜை, புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை அகில இந்திய விஸ்வ பிரம்மா பேரவைத் தலைவா் முத்துசாமி ஆசாரி, அய்யப்பன், சித்தி விநாயகம், முருகன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.