அழகாபுரியில் ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை
பாவூா்சத்திரம் அருகேயுள்ள அழகாபுரியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுமென திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பாவூா்சத்திரம் அருகேயுள்ள அழகாபுரியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுமென திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணியிடம், தென்காசி தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் அளித்துள்ள மனு:
பாவூா்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் அமைந்துள்ள ரேஷன் கடையில் அழகாபுரி, சுவிசேஷபுரம், சாலைப்புதூா், வட்டாலூா் பகுதிகளைச் சோ்ந்த 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை வாங்கிச்செல்கின்றனா். இதில், அழகாபுரி மற்றும் சுவிசேஷபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நான்கு வழிச்சாலை பணி நடைபெறும் பகுதியை தாண்டி வர வேண்டியுள்ளது. இதனால் முதியோா் மற்றும் பெண்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அழகாபுரியில் பகுதி நேர ரேஷன் கடையை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...