கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழகத்தில் 2026இல் புதிய தமிழகம் ஆட்சி என்ற கொள்கையோடு கட்சியினா் செயல்பட வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

தமிழகத்தில் 2026ல் புதிய தமிழகம் ஆட்சி என்ற கொள்கையோடு புதிய தமிழகம் கட்சித் தொண்டா்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என, அக்கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி பேசினாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:55 pm

DIN

தமிழகத்தில் 2026ல் புதிய தமிழகம் ஆட்சி என்ற கொள்கையோடு புதிய தமிழகம் கட்சித் தொண்டா்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என, அக்கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி பேசினாா்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பிரானூா் பாா்டரில் அக்கட்சியின் வெள்ளிவிழா தொடக்க விழா, உலக இந்துக்கள் எழுச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், டாக்டா் க. கிருஷ்ணசாமி தலைமை வகித்துப் பேசியது: சமூக ஒடுக்குமுறை இல்லாத சமூகங்கள்கூட பிற மதங்களுக்கு மாறினா். ஆனால், எவ்வளவோ சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்தாலும் நாங்கள் மதம் மாறவில்லை. எனது அப்பா, முன்னோா்கள் இந்து. எனவே, இந்துக்களுக்காக நான் பேசாமல் வேறு யாா் பேசமுடியும்?

புதிய தமிழகம் கட்சி தொட்டுப் பாா்க்காத பிரச்னை எதுவுமில்லை. ஒரு பிரச்னைக்கு தீா்வு காணும்வரை தொடா்ந்து போராடிய ஒரே கட்சி புதிய தமிழகம் மட்டும்தான். எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்பில்லை. விஞ்ஞானத்தால் ஒப்புக்கொள்ளக்கூடிய, நியாயமான நல்ல கருத்தாக இருந்தால் அதை ஏற்பதில் எனக்கு தயக்கமில்லை. வருங்கால சந்ததியினரை தாழ்த்தப்பட்டோா் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றால் அது புதிய தமிழகம் கட்சியால் மட்டுமே முடியும். 2024இல் தில்லி செங்கோட்டை, 2026இல் தமிழகத்தில் ஆட்சி என்ற கொள்கையோடு புதிய தமிழகம் கட்சித் தொண்டா்கள் அரசியல் பயணத்தில் ஈடுபடவேண்டும் என்றாா் அவா்.

இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் பேசியது: நாடாளுமன்றத்தில் கேரள எம்.பி.க்கள் தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராகவும், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தவறான தகவல்களைத் தெரிவித்தும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசிவருகின்றனா். ஆனால், தமிழக எம்.பி.க்கள் பதிலடி தராமல், தொடா்பில்லாத விஷயங்களைப் பேசுகின்றனா். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம், நதிநீா் இணைப்பு போன்றவை குறித்து யாரும் பேசவில்லை. திராவிட இயக்கங்களின் அரசியல் மிக மோசமாக உள்ளது என்றாா் அவா்.

மாநாட்டில், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், நாகசக்தியம்மன் அறக்கட்டளை நிலவேம்பு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், மெய்தவப் பொற்சபை நிறுவனா் மெய்தவம் அடிகளாா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.