தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேலகரத்தில் சிதம்பரனாா் சைவ சபை பொதுக்குழு கூட்டம்

மேலகரம் சிதம்பரனாா் சைவ சபையின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திரிகூடராசப்பக் கவிராயா் அரங்கில் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:35 pm

DIN

மேலகரம் சிதம்பரனாா் சைவ சபையின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திரிகூடராசப்பக் கவிராயா் அரங்கில் நடைபெற்றது.

கௌரவத் தலைவா் பி. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தாா். திருமலை வரவேற்றாா். பொருளாளா் பேச்சிமுத்து வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ராமசுப்பிரமணியன் பழனியப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா். பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; வேளாளா் என்ற பெயரை பிற சாதியினா் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.