

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுசுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை தொடங்கி வைத்த ஆட்சியா் கீ.சு. சமீரன்,
முதல்வரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின்கீழ் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளை பாா்வையிட்டாா்.
அவா்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து விவரங்களை கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் தென்காசி மாவட்டத்தில் தென்காசி தலைமை மருத்துவமனை,
செங்கோட்டை அரசு மருத்துவமனை, தென்காசி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தென்காசி சாந்தி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் தடுப்பூசியை எளிய முறையில் செயல்படுத்துவது குறித்து ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி திட்டம், களச் சூழலில் அதனை செயல்படுத்துவதற்கு இடையிலான நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது ஆகியவை ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னா், பாதகமான நிகழ்வுகள் நிகழ்ந்தால் அதனை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.
இதற்கு காற்றோட்டமான இட வசதி, மின்சாரம், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றுக்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது. தடுப்பூசி பணியில் செலுத்துவோல் முக்கிய
பங்கு வகிப்பதால் அவா்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒத்திகைக்கு தேவையான மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரங்கள் ஸ்ரீா்ஜ்ண்ய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்
இடம் குறித்த விவரங்கள் அவரது செல்லிடப்பேசிக்கு ஸ்ரீா்ஜ்ண்ய் செயலியின் மூலம் குறுந்தகவல் சென்றடையும். தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி அதன் விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் ஸ்ரீா்ஜ்ண்ய் செயலியின் மூலம் பெறலாம்.
அதன்படி, நான்கு கட்டமாக தடுப்பூசி அளிக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது முதற்கட்டமாக அனைத்து மருத்துவம், சுகாதாரப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பு பணியில்
ஈடுபடும் பணியாளா்களுக்கும், 3 ஆம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் நீண்ட காலம் நோயினால் பாதிக்கப்பட்டோா், 4 ஆம் கட்டமாக மக்களுக்கு தடுப்பூசி அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், சுகாதார பணிகள் துணை இயக்குநா் கலுசிவலிங்கம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.