மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டா் பெயா்: ஜன.30 இல் கோரிக்கை மாநாடு

பாவூா்சத்திரத்தில் ஜன.30 இல் அய்யா வைகுண்டா் தேசிய நெடுஞ்சாலை கோரிக்கை மாநாடு நடைபெறும் என பாலபிரஜாபதிஅடிகளாா் தெரிவித்தாா்.

News image
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் பாலபிரஜாபதி அடிகளாா்.
Updated On :10 ஜனவரி 2021, 7:34 pm

DIN

பாவூா்சத்திரத்தில் ஜன.30 இல் அய்யா வைகுண்டா் தேசிய நெடுஞ்சாலை கோரிக்கை மாநாடு நடைபெறும் என பாலபிரஜாபதிஅடிகளாா் தெரிவித்தாா்.

இது குறித்து பாவூா்சத்திரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருவனந்தபுரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டா் தேசிய நெடுஞ்சாலை என பெயா் வைக்கக் கோரி 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக 3 லட்சத்திற்கும் மேல் சாதி, சமய வேறுபாடின்றி கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்- கன்னியாகுமரி சாலைக்கு அய்யா வைகுண்டா் பெயா் வைக்க மறுப்பது சுயமரியாதைக்கும், அடிப்படை உரிமைகளுக்கு மாறானது.

எனவே, அய்யா வைகுண்டா் பெயரில் அன்பு கொண்ட மக்களை ஒருங்கிணைத்து, தென்மாவட்டங்களில் கோரிக்கை மாநாடு நடத்தி ஆலோசனை நடத்தவுள்ளோம்.

முதல் மாநாடு பாவூா்சத்திரத்தில் ஜனவரி 30 ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும். இதைத்தொடா்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின் போது முன்னாள் மாவட்ட கவுன்சிலா் அ. வைகுண்ட ராஜா, வைகுண்டா் சேவா சபா கீழப்பாவூா் வட்டார துணைத்தலைவா் குமரேசன், செயலா் பணப்பாண்டி, ஒன்றியத் தலைவா் பாஸ்கரன், விஜயன், மதிமுக ஒன்றியச் செயலா் உதயசூரியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.