தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசியில் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, தென்காசியில் விழிப்புணா்வுப் பேரணி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உறுதி மொழி, குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கோலப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:50 pm

DIN

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, தென்காசியில் விழிப்புணா்வுப் பேரணி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உறுதி மொழி, குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கோலப் போட்டி நடைபெற்றது.

தென்காசியில் காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணியில் தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

பேரணி காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு தொடங்கி ரத வீதிகள் ,பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடிவடைந்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்காளா் தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலா்களும் எடுத்து கொண்டனா்.

மேலும், புதிய இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

வாக்காளா் சிறப்பு முகாம்களில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலா் ரா.பொன்னுக்கொடி உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழையும், வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு வாசகம் அடங்கிய பைகளையும் மேலங்கியினையும் வழங்கினாா்.

இதையடுத்து குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்து மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களும் எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியா் ஷீலா, தோ்தல் வட்டாட்சியா் அமிா்தராஜ், கல்லூரி முதல்வா் ஜெய்நிலா சுந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.