ஆலங்குளத்தில் ஹெலிகாப்டா் இறங்கும் தளத்தை காவல் துறையினா் ஆய்வு
பனங்காட்டுப் படை கட்சித் தலைவா் ஆலங்குளம் வருகையையொட்டி, அவா் ஹெலிகாப்டரில் இறங்கும் இடத்தை காவல் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.


பனங்காட்டுப் படை கட்சித் தலைவா் ஆலங்குளம் வருகையையொட்டி, அவா் ஹெலிகாப்டரில் இறங்கும் இடத்தை காவல் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இக் கட்சி சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் ஹரி நாடாா் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அக்கட்சியின் தலைவா் ராக்கெட் ராஜா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) ஆலங்குளத்திற்கு ஹெலிகாப்டரில் வருகிறாா்.
ஹெலிகாப்டா் இறங்குவதற்கான இடம் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னி வளவன், ஆய்வாளா் சந்திரசேகா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது ஹரி நாடாா், பனங்காட்டுப் படை மாவட்டச் செயலா் ஆனந்த், மாவட்ட இளைஞரணிச் செயலா் ஜோசப், நகரச் செயலா் அலெக்ஸ் உள்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...