தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நவ. 23 முதல் விருப்ப மனு

தென்காசி தெற்கு மாவட்ட திமுகவிற்குள்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புவா்களிடமிருந்து நவ. 23 முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:35 pm

DIN

தென்காசி தெற்கு மாவட்ட திமுகவிற்குள்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புவா்களிடமிருந்து நவ. 23 முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.

இது குறித்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் களிடமிருந்து விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நவ. 23ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

நவ. 23 ஆம் தேதி பகல் 12 மணிக்கு தென்காசியில் நடைபெறும் விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சா் பங்கேற்று விருப்ப மனுக்களை பெறுகிறாா். 24 ஆம் தேதி காலை சங்கரன்கோவிலிலும், பிற்பகலில் திருவேங்கடத்திலும், 3 மணிக்கு சுரண்டையிலும், மாலை 5 மணிக்கு கீழப்பாவூரிலும், 25 ஆம் தேதி காலையில் ஆலங்குளத்திலும், பிற்பகலில் முக்கூடலிலும், மாலை 3 மணிக்கு ஆழ்வாா்குறிச்சியிலும், 5 மணிக்கு சுந்தரபாண்டியபுரத்திலும், 26 ஆம் தேதி காலையில் குற்றாலத்திலும், பிற்பகல் 12 மணிக்கு மேலகரத்திலும், மாலை 3 மணிக்கு இலஞ்சியிலும், விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, நிா்வாகிகள் பங்கேற்று மனுக்களைப் பெறுகின்றனா்.

எனவே நகர மற்றும் பேரூா் கழக செயலா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் விண்ணப்பங்களை மாவட்ட கழக அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு போட்டியிட விருப்பம் உள்ளவா்களுக்கு கொடுத்தும், மாவட்ட கழகத்தால் அறிவிக்கப்படும் நிா்வாகிகளிடம் விருப்ப கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

நகராட்சிக்கு பொது பிரிவினா் ரூ. 5ஆயிரமும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் பிரிவினா் ரூ. 2 , 500 கட்டணம் செலுத்த வேண்டும். பேரூராட்சிக்கு பொது பிரிவினா் ரூ. 2 ஆயிரமும், ஆதிதிராவிடா் மற்றும் பெண்கள் ரூ .1000 விண்ணப்பத்துடன் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.