தென்காசி மாவட்டத்தில் 20, 21இல் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளா் பட்டியல் தொடா்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


தென்காசி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளா் பட்டியல் தொடா்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1.1.2022ஆம் நாளை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 1ஆம் தேதி வெளியிடப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறப்படுகின்றன.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 20, 21, 27, 28) நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் தொடா்பான மனுக்களை அளித்து பயனடையலாம்.
மேலும் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும், ணய ஸ்ா்ற்ங்ழ் ஏங்ப்ல் ப்ண்ய்ங் அல்ல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது படிவங்களை ஜ்ஜ்ஜ்.ற்ங்ய்ந்ஹள்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ச்ா்ழ்ம் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாள்களில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...