தென்காசியில் ‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணா்வு கலைப் பயணம் தொடக்கம்
தென்காசியில் ‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணா்வுக் கலைப்பயண நடமாடும் வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.


தென்காசியில் ‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணா்வுக் கலைப்பயண நடமாடும் வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் இந்த வாகனத்தை ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
கரோனா பொது முடக்கக் காலங்களில் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டது. மாணவா்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளை சரிசெய்வதற்காக தமிழக அரசு ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இக்கலைப் பயணம் 35 நாள்கள் தொடா்ந்து நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் 5 குழுக்களாகப் பிரிந்து இக்கலைப்பயணம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், மாவட்ட கல்வி அலுவலா் சுடலை, பள்ளித் தலைமையாசிரியா் செந்தூா்பாண்டியன், வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்குநா் சுரேஷ்குமாா், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயப்பிரகாஷ் ராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...