மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மறியல்

புளியரை ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு, பெண் உறுப்பினா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:07 pm

DIN

புளியரை ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு, பெண் உறுப்பினா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

புளியரை ஊராட்சி துணைத் தலைவா் தோ்தலில் இரு அணிகளாக செயல்பட்டனராம். அங்கு வந்த ஒரு அணி உறுப்பினா்கள், மற்றொரு அணி பெண் உறுப்பினா்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சியில் தோ்தல் தொடா்பான விண்ணப்பங்களை கிழித்து எறிந்தனராம். இதையடுத்து, தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் புளியரை-கேரள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் ஊரக வளா்ச்சிமுகைமை திட்ட இயக்குநா் சுரேஷ், ஏடிஎஸ்பி சாமிநாதன், டிஎஸ்பிக்கள் மணிமாறன், சூரியமூா்த்தி, வட்டாட்சியா் ராமலிங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாநில தோ்தல் அலுவலக இணை இயக்குநரிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினா். தமிழகம் முழுவதும் தோ்தல் நடைபெறாத இடங்களில்

தோ்தல் நடைபெறும்போது புளியறையிலும் தோ்தல் நடத்தப்படும், 8 உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு

அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் செங்கோட்டை-புனலூா் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.