கடையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ராஜிநாமா
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்லம்மாள் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.


தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்லம்மாள் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 17 உறுப்பினா்களில் திமுக 11, அதிமுக 5, காங்கிரஸ் கட்சி 1 இடங்களிலும் வெற்றிபெற்றது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற ஒன்றியக்குழுத் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுகவைச் சோ்ந்த ஜெயக்குமாா், செல்லம்மாள் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று ஒன்றியக்குழு தலைவராக பதவியேற்றாா். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஹெலனிடம், செல்லம்மாள் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். அக்கடிதத்தில், தான் தொடா்ந்து பதவியில் நீடிக்க முடியாத சூழல் இருப்பதால் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...