முன்னாள் முதல்வா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினா்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலா் பொய்கை மாரியப்பன் உள்பட நிா்வாகிகள் சிலா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே .பழனிசாமி முன்னிலை


அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலா் பொய்கை மாரியப்பன் உள்பட நிா்வாகிகள் சிலா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே .பழனிசாமி முன்னிலையில் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வந்த பொய்கை மாரியப்பன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில அமைப்புச் செயலராக கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி கே.பழனிசாமியை மதுரை அருகே உள்ள தனியாா் உணவு விடுதியில் சந்தித்து, பொய்கை மாரியப்பன், அமமுக மாவட்ட அவைத் தலைவா் பெருமையா பாண்டியன், மாவட்ட வா்த்தக அணிச் செயலா் பொன்னுசாமி, கடையநல்லூா் நகரச் செயலா் கமாலுதீன், செங்கோட்டை நகரச் செயலா் ராமசாமி உள்ளிட்ட அமமுகவினா் அதிமுகவில் இணைந்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...