கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தென்காசி மாவட்டத்தில் வாகனச் சோதனை: 407 வழக்குகள் பதிவு

தென்காசி மாவட்டத்தில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிர வாகனச் சோதனையில் வாகனச் சட்டங்களை மீறியதாக 407 வழக்குகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 73 போ் மீதும் வழக்குப் பதிவு

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:07 pm

DIN

தென்காசி மாவட்டத்தில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிர வாகனச் சோதனையில் வாகனச் சட்டங்களை மீறியதாக 407 வழக்குகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 73 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் வாகனச் சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபா்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்த சோதனை, பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், 796 வாகனங்கள் சோதனையிடப்பட்டு, மோட்டாா் வாகனச் சட்டத்தை மீறியதாக 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 73 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.