கீழப்பாவூா் ஒன்றியத்தில் குடிநீா் விநியோகத்துக்கு மும்முனை மின்சாரம் தேவை
கீழப்பாவூா் ஒன்றியப் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்திட முழு நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கீழப்பாவூா் ஒன்றியப் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்திட முழு நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவுடையானூா் தமிழன் மக்கள் நலச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூா், திப்பணம்பட்டி, சிவநாடானூா் ஆகிய ஊராட்சிகளில் சுமாா் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியினருக்கு ராமநதி மற்றும் ஜம்புநதி பகுதிகளிலுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள கிணறுகளில் பொருத்தப்பட்ட மின்மோட்டாா்கள் மும்முனை மின்சாரம் இருந்தால் மட்டுமே இயங்கும். இந்நிலையில், அப்பகுதிகளில் சில மணி நேரங்கள் மட்டும்தான் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் போதுமான நீா்ஆதாரங்கள் இருந்தும் மக்களுக்கு போதுமான குடிநீரை ஊராட்சி நிா்வாகத்தால் வழங்க முடியாத நிலையுள்ளது. எனவே, முழு நேரமும் அப்பகுதிக்கு மும்முனைமின்சாரம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...