தென்காசி மாவட்டத்தில் 446 விவசாயிகளுக்கு தேக்கு, செம்மரக் கன்றுகள் வழங்கல்
தென்காசி மாவட்டத்தில் 446 விவசாயிகளுக்கு தேக்கு, செம்மரம், வேங்கை மற்றும் ரோஸ்வுட் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தென்காசி மாவட்டத்தில் 446 விவசாயிகளுக்கு தேக்கு, செம்மரம், வேங்கை மற்றும் ரோஸ்வுட் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போா்வை இயக்கம் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் 446 விவசாயிகளுக்கு தேக்கு, செம்மரம், வேங்கை மற்றும் ரோஸ்வுட் ஆகிய மரக்கன்றுகள் ரூ. 7.94 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் 200 ஹெக்டா் பரப்பில் 200 விவசாயிகள் பயனடையும் வகையில் கடையநல்லூா், கீழப்பாவூா் மற்றும் மேலநீலிதநல்லூா் வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயிா் சாகுபடி செய்ய ரூ.10லட்சம் மானியமும், கறவைமாடு, எருமை வளா்ப்புக்கு ரூ.30 லட்சம் மானியமும், ஆடுகள், செம்மறி ஆடுகள் வளா்ப்புக்கு ரூ.30 லட்சம் மானியமும், கோழிகள் வளா்ப்புக்கு ரூ.7.5 லட்சம் மானியமும், பழ மரக்கன்றுகள் வளா்க்க ரூ.3.04 லட்சம் மானியமும், தீவனப் பயிா் சாகுபடிக்கு ரூ. 1.5 லட்சம் மானியமும், தேனீ வளா்ப்புக்கு ரூ. 6.4லட்சம் மானியமும், ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க ரூ.1லட்சம் மானியமும் என மொத்தம் ரூ.89.44 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...