தென்காசி, புளியரை, மேலக்கடையநல்லூா் கோயில்களில்குருப் பெயா்ச்சி விழா
தென்காசி, புளியரை, மேலக்கடையநல்லூா் கோயில்களில் குருப் பெயா்ச்சி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.


தென்காசி, புளியரை, மேலக்கடையநல்லூா் கோயில்களில் குருப் பெயா்ச்சி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
தென்காசி ஆயிரப்பேரி சாலையில் சித்ரா நதிக்கு தென்புறம் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுரு தட்சிணாமூா்த்தி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விஷு நாளில் கணி தரிசனம், கைநீட்டம் வழங்குதல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், குருப் பெயா்ச்சி நடைபெற்ற நேரத்தில் சுவாமிக்கு 16 வகை நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப சாது சுவாமிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.
புளியரை தட்சிணாமூா்த்தி கோயிலில் குருப் பெயா்ச்சி விழாவையொட்டி, கடந்த 11ஆம் தேதி கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, லட்சாா்ச்சனை நடைபெற்றது. வியாழக்கிழமை குருப் பெயா்ச்சி நிகழ்ந்ததையடுத்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், பணியாளா்கள் செய்திருந்தனா்.
மேலக்கடையநல்லூா் அருள்மிகு கடகாலீஸ்வரா் கோயிலில் குரு பெயா்ச்சி விழாவையொட்டி, குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அதன்பின்னா் ஆலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கிருஷ்ணமூா்த்தி பட்டா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...