தென்காசியில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம்
தென்காசி மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.


தென்காசி மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
தமிழக அரசு சுகாதார தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ் முன்னிலை வகித்தாா்.
இதில் , தென்காசி மாவட்டத்திலுள்ள 10 வட்டாரங்களிலும் காணொளி மூலமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் பிரநிதிகள், ஊராட்சி மன்ற தலைவா்கள், தன்னாா்வலா்கள் தங்களுடைய வட்டாரத்தில், தங்கள் பகுதிக்கு தேவையான உள்கட்டமைப்பு, சுகாதார தேவைகளை மேம்படுத்த கோரிக்கை விடுத்தனா்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் தி.உதயகிருஷ்ணன், இணை இயக்குநா்கள் (தேசிய நலக்குழுமம்) மதுசூதனன், (சுகாதார சீரமைப்புத்திட்டம்- பூமிநாதன், சுகாதாரப்பணிகள்- வெங்கட்ரங்கன், துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...