மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கீழப்பாவூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூன் 2022, 8:04 pm

DIN

அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர காங்கிரஸ் தலைவா் சிங்ககுட்டி (எ) குமரேசன் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத்தலைவா் ராஜசேகா், கவுன்சிலா்கள் இசக்கி ராஜ், கோடீஸ்வரன், வட்டாரப் பொருளாளா் மாரிமுத்து, பாவூா்சத்திரம் நகரத் தலைவா் ஆனந்த், ராமராஜா, சிவசுப்ரமணிய முதலியாா், சின்னராஜா, நகர இளைஞா் காங்கிரஸ் செயலா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் பொன்கணேசன், மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் வைகுண்ட ராஜா, மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் மதியழகன், வட்டார சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் ஞானச்செல்வன் உள்ளிட்டோா் பேசினா். வட்டாரச் செயலா் குமாா் பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.