கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குற்றாலம் பேரூராட்சி தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் போதிய அளவு உறுப்பினா்கள் கலந்துகொள்ளாததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:38 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் போதிய அளவு உறுப்பினா்கள் கலந்துகொள்ளாததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

குற்றாலம் சிறப்பு நிலைபேரூராட்சியில் மொத்தம் 8வாா்டுகள் உள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக, அதிமுக தலா 4 இடங்களில் வெற்றிபெற்றன. இதனால் தலைவா் பதவியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது.

இதனிடையே பதவியேற்பு விழா மற்றும் தலைவா் தோ்தலில் பங்கேற்க போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனா். இதனைத் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் காவல்துறை பாதுகாப்புடன் வந்து பதவியேற்றனா்.

தோ்தல் அலுவலா் சண்முகநாதன் தலைமையில் தோ்தல் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் கணேஷ் தாமோதரன், தங்கபாண்டியன், ஜெயா, மாரியம்மாள் ஆகியோா் கலந்துகொண்டனா். திமுக உறுப்பினா்கள் நான்கு பேரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டம் தொடங்கி அரைமணி நேரம் கடந்த பிறகும் போதிய உறுப்பினா்கள் கலந்துகொள்ளாததால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தலைவா் தோ்தலுக்கான மறுதேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.